முக்கிய செய்திகள்

கலைஞர் டி.விக்கு ரூ 200 கோடி லஞ்சம்: சி.பி.ஐ. வாதம்

Kalaignar-TV 1

துபாய், மே.12 - துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடத்தின் 147 வது  மாடியிலிருந்து குதித்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். துபாயில் புர்ஜ் ஹாலிபர் என்ற கட்டிடம் உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரிமாதம் திறக்கப்பட்ட 160 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.சிகாகோவை சேர்ந்த ஸ்கிட்மோர் என்ற கட்டிட கலை நிபுணர் இதனை வடிவமைத்துள்ளார்.  இந்நிலையில் நேற்று இங்குள்ள 147 வது மாடியிலிருந்து 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 2717 அடி உயரத்தில் உள்ள 147 வது  மாடியில் இருந்து குதித்த அவரது உடல் 108 வது மாடியில் விழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்றும், விடுமுறை அளிக்காததால் தான் வேலை பார்த்த நிறுவனம் உள்ள 147 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.புது டெல்லி,மே.12 - ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த நிறுவனம்தான் கலைஞர் டி.விக்கு லஞ்சமாக ரூ. 200 கோடியை வழங்கி இருக்கிறது என்று சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லலித் வாதிட்டார். உடல் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே 2 ஜி அலைக்கற்றை உரிமம் பெறுவதில் முன்னுரிமை கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எந்த தவறும் செய்யாத என்னை குறி வைத்து சி.பி.ஐ. தாக்குகிறது என்று அந்த மனுவில் பல்வா குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. சார்பில் மூத்த வழக்கறிஞர் யூ.யூ. லலித் ஆஜரானார். பல்வாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், 2 ஜி உரிமம் பெறுவதற்கான முன்னுரிமை என்பது விண்ணப்பித்த நாளை வைத்து முடிவு செய்யப்படவில்லை. மாறாக தொலைத் தொடர்பு அலுவலக கவுண்டர்களை நோக்கி எவ்வளவு வேகமாக முண்டியடித்துக் கொண்டு செல்ல முடிந்தது என்பதை பொறுத்துத்தான் முன்னுரிமை முடிவு செய்யப்பட்டது என்றார். 

ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு உரிமம  கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது என்றும் அவர் வாதிட்டார். 

2 ஜி உரிமம் வழங்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் முன்னரே ஸ்வான் டெலிகாம் சார்பில் உரிம தொகைக்கான ரூ. 1,658 கோடி வங்கி வரைவோலை எடுக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த நிறுவனம் கலைஞர் டி.விக்கு லஞ்சமாக ரூ. 200 கோடி வழங்கி இருக்கிறார்கள். அது பற்றி ஊடகங்களில் செய்தி வெளியாக தொடங்கியதும் வழக்கு பதிவான பிறகு அந்த தொகை திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது என்றும் லலித் வாதிட்டார். வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: