முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயன ஆயுதங்தளை அழிக்கும் பணி சிரியாவில் தொடங்கியது

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

டமாஸ்கஸ், அக்.8 - சிரியாவில், ரசாயன ஆயுதங்தளை அழிக்கும் பணி தொடங்கியது என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 3 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் டமாஸ்கஸ் நகரில் போராட்டக்காரர்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி ராணுவம் தாக்கியது. இதில் 1400பேர் இறந்தனர். இதற்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு சீனா, ரஷ்யா  எதிர்ப்பு தெரிவித்தன.  இதையடுத்து ரசாயன ஆயுதங்தளை அழிக்க  ஒத்துழைப்பதாக அதிபர் பஷார் அல் ஆசாத் அறிவித்தார். அதன்படி சிரியாவில் ரசாயன ஆயுதங்களை கண்டயறியும் பணியில் ஐ.நா. அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் அமெரிக்க, ரஷ்ய கூட்டு குழுவினர் இடம்பெற்றிருந்தனர். 

அங்கு சுமார் 1000 டன் ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்றிச்செல்லும் பணி தொடங்கியது. பின்னர் நிபுணர்களின் ஆலோனைப்படிரசாயன ஆயுதங்கள் படிப்படியாக அழிக்கப்படும். இந்த பணி 2014 ஜூன் மாதம் வரை நடைபெறும் என்று ஐ.நா. நிபுணர்கள் தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்