முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்,மே.14 - தமிழக சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் அதிக வாக்குகளில் அமோக வெற்றி பெற்றார். கடந்த 2009 ம் ஆண்டில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிட்டார். இடைத் தேர்தலின் போது திருமங்கலம் தொகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்து திருமங்கலம் பார்முலா என்ற ஒன்றை உருவாக்கி தி.மு.க.வினர் வெற்றி பெற்று விட்டனர். இதை நிலை தொடர்ந்து நீடித்து அடுத்தடுத்து நடந்த இடைத் தேர்தல்களிலும் தி.மு.க.வினரே வெற்றி பெற்றனர். 

இந்நிலையில் தமிழக சட்டசபைக்கான தேர்தல் வந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கமும், தி.மு.க. சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் மகன் மணிமாறனும் போட்டியிட்டனர். இதனிடையே ஓட்டுப் பதிவுக்கு பின்னர் ஒரு மாதம் கழித்து திருமங்கலம் தொகுதிக்கான வாக்குகள் மதுரை பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. மொத்தம் 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க வேட்பாளரை காட்டிலும் கூடுதல் வாக்குகளை பெற்று அ.தி.மு.க வேட்பாளர் முத்துராமலிங்கம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருமங்கலம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பது திருமங்கலம் பார்முலாவிற்கு முற்றுப் புள்ளி வைத்தது போல் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்