முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் 80 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      உலகம்
Image Unavailable

 

பெஷாவர்,மே.15 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தலிபான் தற்கொலை படை தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரு தாக்குதலில் 80 பேர் உடல் சிதறி பலியானார்கள். 

பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் ராணுவ பயிற்சி பள்ளி அருகே பயிற்சி முடிந்து சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டிருக்கும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலை படையினர் பயிற்சி மைய வளாகத்திற்கு அருகில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். 

சடலங்களை அகற்றிக் கொண்டிருக்கும் போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரு தாக்குதல்களில் 80 பேர் கொல்லப்பட்டனர். 115 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் 40 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் துணை ராணுவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்லேடன் சாவிற்கு பழி வாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது மேலும் தொடரும் என்றும் தெகரிக் இ தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அஷானுல்லா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்