முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசன் அலி பாட்னா கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      ஊழல்
Image Unavailable

பாட்னா,மே.15 - கறுப்புப்பண மன்னன் ஹசன் அலி வருகின்ற 26-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று பாட்னா முதன்மை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த ஹசன் அலி கான், குதிரைப்பண்ணை அதிபர். இவர் முறைகேடாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பாத்தியம் செய்து அதற்கு வரியும் கட்டாமல் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்திருப்பது தெரியவந்ததுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதோடு கைதும் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மும்பையில் உள்ள நியூ ஆர்தூர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது முறைகேடான வகையில் பாஸ்போர்ட் வாங்கியது தொடர்பாக வழக்கும் உள்ளது. பீகார் மாநிலத்தில் இந்த பாஸ்போர்ட்டை ஹசன் அலி போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கியிருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பான வழக்கு ஹசன் அலி மீது பாட்னா நகரில் உள்ள கோத்வாலி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹசன் அலி பாஸ்போர்ட் வாங்க தற்போது புதுவை கவர்னராக இருக்கும் இக்பால் சிங்கும் உதவியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் அமுலாக்க பரிவினர் பல முறை விசாரணை நடத்தியும் உள்ளனர். இந்த போலி பாஸ்போர்ட் வாங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் பாட்னாமுதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வருகின்ற 26-ம் தேதி ஆஜராகும்படி அவருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்