முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பொருள் கடத்த முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

அமிர்தசரஸ்,அக்.27 - இந்தியாவுக்குள் ரூ.124 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்த முயன்ற பாகிஸ்தானியர் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

இந்தாண்டு ஆப்கானிஸ்தானில் கஞ்சா விலைச்சல் அமோகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு விலையும் கஞ்சாவை பாகிஸ்தானியர் கடத்தி சர்வதேச சந்தையில் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை தீவிரவாதிகளுக்கு கொடுத்து இந்தியாவில் நாசத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஜம்மு_காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினரும் எல்லைப்பாதுகாப்பு படையினரும் உஷாராக இருப்பதால் அந்த மாநிலம் வழியாக ஊடுருவ முடியவில்லை. அதனால் பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல்காரர்கள் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானையொட்டி உள்ள சர்வதேச கோடு வழியாக போதைப்பொருளை கடத்தி வருவதாக புலனாய்வு மூலம் இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையொட்டி எல்லைப்பாதுகாப்பு படையினர் உஷாராகினர். கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது பஞ்சாப் மாநிலத்தையொட்டி உள்ள முல்லன்கோட் வழியாக பாகிஸ்தானியர்கள் சுமார் 24 கிலோ போதைப்பொருளை கடத்தி வருவதை எல்லைப்பாதுகாப்பு படையினர் பார்த்துவிட்டனர். உடனே அவர்களை நோக்கி சுட்டனர். அப்போது பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் திருப்பி சுட்டனர். இதில் இருதரப்பினர்களிடையே சுமார் அரைமணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தானில் போதைப்பொருளை கடத்தி வந்தவர்களில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த 24 கிலோ போதைப்பொருளயும் கைப்பற்றினர். இதன் மதிப்பு சர்வேதேச சந்தையில் ரூ.124 கோடியாகும். மேலும் அந்த இடத்தை சுற்றி தேடியபோது ஏ.கே.47 மற்றும் கைப்துப்பாகிகள் குறித்த குறிப்பிகள் கிடந்தன. அந்த 3 பேர்கள் யார் யார் என்பதை எல்லைப்பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த அளவுக்கு பெரிய அளவில் போதைப்பொருள் கடத்த முயன்றது முதல்தடவையாகும். கடந்த 2012_ம் ஆண்டு இதே மாதிரி பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளை இந்தியாவுக்கு கடத்த முயன்ற பாகிஸ்தானியர் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தற்போதுதான் இந்த மாதிரியான சம்பவம் நடந்துள்ளது. இவர்களின் உடல்களை பரிசோதித்துவிட்டு பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அதை பெற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. மேலும் இந்த போதைப்பொருளை பெற்றுக்கொள்ள வந்த இந்திய கடத்தல்காரர்கள் தப்பிவிட்டனர். இருந்தபோதிலும் அவர்களை பிடித்துவிடுவோம் என்று உயரதிகாரி தோமர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்