முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படகு கவிழ்ந்து மியான்மர் நாட்டினர் 67 பேர் சாவு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

யாங்கூன், நவ.5 - மியான்மரில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 62 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மியான்மரிலிருந்து 70 பேருடன் ஒரு படகு வங்காள தேசத்துக்கு வங்காள விரிகுடா கடலில் சென்றது. மியான்மரில் உள்ள ஒன்தாவ் கி என்ற கிராமத்திலிருந்து கிளம்பிய அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 70 பேர் இருந்தனர். 

சில ஆண்டுகளாக அங்கு நடைபெற்று வரும் மதக்கலவரம் காரணமாக ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி அருகில் இருக்கும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதேபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரும், அவர்களது உறவினர்களும் கிராமத்தினரும் என பலர் படகில் சென்றுள்ளனர். அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றியதாலும்,  தற்போது மழை காலம் என்பதாலும், கடுமையான காற்று வீசியதாலும் வங்காள விரிகுடா கடலில் சென்ற படகு சேதமடைந்தது. 

இதனால் படகில் தண்ணீர் புகுந்தது. பாரம் தாங்காமல் நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் உள்பட 8 பேரை மீட்டதாக மியான்மர் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். மீதியுள்ளவர்கள் கதி என் ஆயிற்று என்று தெரியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வாரம் 1500 பேர் மியான்மரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்