முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் எதிரொலி: மே.இ.தீவு வீரர் ரோச் நாடு திரும்பினார்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 11  - தோள்பட்டை காயம் காரணமாக மே.இ.தீவு முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ரோச் நாடு திரும்பினார். 

டேரன் சம்மி தலைமையிலான மே.இ. தீவு அணி  இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு கேப்டன் தோனி தலைமையி லான  இந்திய அணிக்க எதிராக விளை யாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையேயான 2 டெ ஸ்ட் போட்டித் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த  முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்றது. 

இதனைத் தொடர்ந்து 2_வது மற்றும் கடை சி  டெஸ்ட் மும்பை வாங்க்டே மைதானத் தில் வருகிற 14_ம் தேதி (வியாழக் கிழமை) தொடங்குகிறது. 

இந்தப் போட்டியிலும் மே.இ.தீவு அணியின் வேகப் ப ந்து வீரர் கேமர் ரோச் ஆடவில்லை. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளார். 

ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியிலும் ஆடவில்லை. காயத்தில் இருந்து குணமடைய வாய்ப்பு  இல்லாத தால் எஞ்சிய போட்டிகளில் ஆடாமல் நாடு திரும்பியுள்ளார். 

மே.இ.தீவு அணியின் திறமை வாய்ந்த பவு லரான ரோச் தரவரிசையில் 14_வது இடத் தில் உள்ளார். 23 டெஸ்டில் விளையாடி 85 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 

அவருக்குப் பதிலாக ஷேனால் கேப்ரியல் இடம் பெற்று இருக்கிறார். அவர் விரைவி ல் அணியோடு இணைந்து கொள்வார். 

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரி ல் விளையாடும் மே.இ.தீவு அணியில் போலார்டு இடம் பெறவில்லை. காயம் காரணமாக அவர் ஒரு நாள் தொடரில் ஆடவில்லை. 

டெஸ்ட் அணியில் இடம் பெற்ற போவெ ல்,  வீராசாமி பெருமாள், நரசிங் தியோனரின் ஆகியோர் ஒரு நாள் போட்டி அணியிலும் இடம் பெற்று உள்ளனர் 

ஒரு நாள் தொடருக்கான மே.இ.தீவு அணி விபரம் வருமாறு _ 

வெய்ன் பிராவோ (கேப்டன்), கிறிஸ்கெ ய்ல், போவெல், டாரன் போவெல், சாமு வேல்ஸ், லெண்டில் சிம்மன்ஸ், ராம்தின், ராம்பால், டாரன் சம்மி, ஹோல்டர், சார் லஸ், டியோபெஸ்ட், நரசிங் தியோனரின், சுனில் நரீன் மற்றும் வீராசாமி பெருமாள் ஆகியோர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்