முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாக்குதல் அபாயம் - அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      உலகம்
Image Unavailable

 

சிகாகோ,மே.17 - பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொன்று விட்டதால் அவரது ஆதரவாளர்கள் கோபமடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. பின்லேடன் வசித்து வந்த வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இரட்டை கோபுர தாக்குதலின் 10 ம் ஆண்டு நினைவு நாளன்று அமெரிக்கா மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த அல்கொய்தா திட்டமிட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. 

அப்படி நடத்தவிருக்கும் தாக்குதல் அமெரிக்காவையே நிலைகுலைய வைப்பதாக இருக்கும் வகையில் பின்லேடன் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. பின்லேடன் இறந்தாலும் அவரது ஆசையை அவரது ஆதரவாளர்கள் நிச்சயம் நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. நாட்டின் மத்தியில் அமைந்துள்ள சிகாகோ நகரை தாக்குவதே அல்கொய்தாவின் நீண்ட கால திட்டமாக இருந்து வருகிறது. நகரில் உயரமான கட்டிடங்கள் உள்ளதால் தாக்குவது எளிது என்பதால் அவர்கள் இந்நகரை தேர்ந்தெடுத்து பல முறை தாக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. 

இருப்பினும் சிகாகோவை தாக்க மீண்டும் முயற்சிக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அந்நகரின் மூலைமுடுக்கெல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அல்கொய்தாவிடம் இருந்து சிகாகோ நகருக்கு எவ்வித அச்சுறுத்தல் ஏதும் இல்லை. இதற்கு எவ்வித உறுதியான ஆதாரமும் இல்லை. இருப்பினும் நகரை யார் தாக்க நினைத்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அல்கொய்தாவிடம் இருந்து அச்சுறுத்தல் இல்லை என்றாலும் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா உஷாராகவே உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு பிரிவுகளுடன் உளவு அமைப்பு தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறது. ஒருவேளை பயங்கரவாதிகள் தாக்க முயற்சித்தால் அவர்கள் தப்ப முடியாது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறையில் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis