முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கப்பலில் கைதான 7 பேரிடம் விசாரிக்க அனுமதி

புதன்கிழமை, 20 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

தூத்துக்குடி.நவ.21 - அமெரிக்க ஆயுத கப்பலில் கைது செய்யப்பட்ட 7 பேரிடம் விசாரணை நடத்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி அருகே இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பல் பிடிபட்டது. இந்த கப்பலில் இருந்த 35 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 35 பேர்பாஸ் போர்ட்டுகளையும் கியூபிரிவு போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில், கப்பலுக்கு டீசல் கடத்திய சம்பவம் உள்ளிட்ட வைகளை விசாரணை நடத்துவதற்காக தூத்துக்குடி சுங்கத்துறைசூப்பிரண்டுதூத்துக்குடிமுதலாவதுஜூடிசியல்மாஜிஸ்திரேட்டுகோர்ட்டில்மனுதாக்கல்செய்தார். இதில் சென்னை புழல் ஜெயிலில் உள்ள கப்பல் கேப்டன்டுட்னிக்வாலன்டைனிடம்அடுத்தமாதம்(டிசம்பர்) 3-ந் தேதி விசாரணை நடத்தவும்,

பாளையங்கோட்டை ஜெயிலில் உள்ளஆயுதங்களின் பொறுப்பாளர்லலித்குமார்குராங்கிடம்வருகிற28-ந்தேதி விசாரணை நடத்தவும், டீசல் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில்உள்ளமரியஅண்டன்விஜய், ரஞ்சித்குமார், விஜய், முருகேஷ், செல்வம்ஆகிய5 பேரிடமும் வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தவும் அனுமதிகோரி இருந்தனர்.

இந்த மனு மீதான உத்தரவை நீதிபதி சி.கதிரவன்  பிறப்பித்தார். இதில் சுங்கத்துறை அதிகாரிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஜெயிலுக்குச் சென்று விசாரணை நடத்த அனுமதி அளித்துஉத்தரவிட்டார். இதே போல் டீசல் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட விஜய், ரஞ்சித்குமார் உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணைமாவட்டமுதன்மைகோர்ட்டில்நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தி வருகிற21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்