விமானத்தில் செல்போனில் பேச அமெரிக்க தொ.ஆ. பரிந்துரை

Image Unavailable

 

நியூயார்க், நவ-24-விமானத்தில் பறக்கும்போது, பயணிகளை செல்போனில் பேச அனுமதிக்க அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.

விமானம் 3,048 மீட்டர் உயரத்துக்கு மேல் பறக்கும் போது பயணிகள் செல்போனில் பேசவும், செல்போன், குளிகைக்கணினி (டேப்லெட்), கணினிகள் ஆகியவற்றில் அகன்ற அலைவரிசைச் சேவைகளைப் பயன்படுத்தி இணையதளங்களைப் கையாளவும் அனுமதிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

அதே சமயம், விமானம் வானில் ஏறும்போதும், (டேக் ஆப்), தரையிறங்கும் போதும் செல்போன்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு ஆணைய தலைவர் டாம் வீலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “நவீன தொழில்நுட்பங்கள் விமானப்பயணத்தின் போது பாதுகாப்புடனும், நம்பகத்தன்மையுடனும் செல்போன் சேவைகளைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கின்றன. எனவே, நமது பழைய காலாவதியாகிவிட்ட கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது” எனத் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டால்,அது பொதுமக்களின் கருத்துக்கேட்புக்கு விடப்படும்.

 

விமானத்தில் பயணிக்கும் போது வை-ஃபை தொழில்நுட்பத்தின் மூலம் கணினிகளிலும், செல்போன்களிலும் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கு பெரும்பாலான பயணிகள் விரும்புவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ