முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை சந்திக்கிறார் ரஷ்ய அதிபர் மெத்வதேவ்

புதன்கிழமை, 18 மே 2011      உலகம்
Image Unavailable

மாஸ்கோ. மே.- 18 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவும் இம்மாத இறுதியில் பிரான்ஸ் நாட்டில் உள்ள தீயுவில்லி நகரில் சந்தித்து பேச இருக்கிறார்கள். நேட்டோ அமைப்புக்கான ரஷ்ய  தூதர் டிமிட்ரி  ரோகோசின் மாஸ்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள தீயூவில்லி என்ற நகரில் இம்மாத இறுதியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும்,  ரஷ்ய  அதிபர்  டிமிட்ரி மெத்வதேவும் சந்தித்து பேச  இருக்கிறார்கள் என்றார்.
ஐரோப்பா  கண்டத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் ஏவுகணை பாதுகாப்பு குறித்து இரு  தலைவர்களும்  முக்கிய பேச்சு நடத்துவார்கள் என்றும் அவர்  கூறினார்.
ஐரோப்பாவில் உள்ள ஒரு ஏவுகணை நிலையம்  ரஷ்யாவை நோக்கிய நிலையில் முன்னிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி இருக்கக்கூடாது என்பதை அமெரிக்காவிடம் ரஷ்யா  வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவசரப்பட்டு  தாங்கள் எந்த முடிவுக்கும் வந்து விட மாட்டோம் என்றும் பொறுத்திருந்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் ரோகோசின்  கூறினார்.
ஐரோப்பாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணை  திட்டம் ரஷ்யாவை நோக்கி வைக்கப்படவில்லை என்பதற்கு அமெரிக்கா  நம்பகமான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோப் ஏற்கனவே  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள தியூவில்லி என்ற நகரில் ஜி 8 நாடுகளின் உச்சி மாநாடு இம்மாத இறுதியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்போதுதான் இரு  தலைவர்களும் இந்த ஏவுகணை பாதுகாப்பு பிரச்சினை குறித்து விவாதம் நடத்த இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்