முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில், இந்தியர் வாழும் பகுதியில் மதுபானம் விற்க தடை

புதன்கிழமை, 11 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

சிங்கப்பூர், டிச.12-சிங்கப்பூரில் சிறிய இந்தியா என்ற பகுதியில் இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர். அங்குள்ள ஹாம்பசையர் சாலையில் நடந்து சென்ற தமிழரான சக்திவேல் குமார வேலு என்ற தொழிலாளி தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தியா, வங்காளதேசம் உள்பட தெற்கு ஆசிய நாடுகளை பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. 10 போலீஸார் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர்.அதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:- சின்னதம்பி மலேசன் (22), சின்னப்பா பிரபாகரன் (23), தங்கராஜன் ஸ்ரீபாலமுருகன் (24), கருப்பையா திருநாவுக்கரசு (24), பெரியய்யாகணேசன் (24), ரவி (24), ரங்கசாமி (24), அன்பரசன் (25), ராஜேந்திரன்மோகன் (25), மகாலிங்கம் (26), செல்வநாதன் (27), அருண் (28), செல்வராஜ் (28), போஸ் (29), சின்னப்பா (30), கணேசன் (31), கிருஷ்ணன் (31), விஜயரகுநாதபூபதி (32), அழகப்பன் (36), சதன் (39), மொங்கன் (40). கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் சிங்கப்பூர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனையும், பிரம் படிகளும் வழங்கப்படும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டின் உள்துறை இணை மந்திரி ஈஸ்வரன், போக்குவரத்து துறை மந்திரி லுயிடக் யா ஆகியோர் நேரில் பார்வையி்ட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே கலவரத்துக்கு மது போதையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே இந்தியர்கள் வாழும் லிட்டில் இந்தியா, ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் மதுபான விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடை இன்னும் சில நாட்கள் அமலில் இருக்கும்  என போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago