முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பணவீக்க விகிதம் 7.47 சதவீதமாக குறைந்தது

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே 20 - கடந்த 7 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பண வீக்க விகிதம் 7.47 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த பண வீக்க விகிதம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒற்றை இலக்கத்துக்கு குறைந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியிருந்தனர். தற்போது பருப்பு, கோதுமை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளதால் கடந்த 7 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 7.47 சதவீதமாக குறைந்துள்ளது. 

கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக இப்போதுதான் பண வீக்கம் இந்த அளவுக்கு குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும் அறிவிப்பு வெளியிட்டதற்கு பிறகு 7.70 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தற்போது 7.47 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கம் குறைந்ததால் மத்திய அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நாட்டின் பணவீக்க விகிதம் 22 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் குறைந்தால் மேலும் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago