முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.16 - பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு கூட்டத்திற்கு தொடர்ந்து மு.க.அழகிரி புறக்கணித்து வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தற்போது மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகி விட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. யாருடன் கூட்டணி சேரும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்  அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து இருந்தார். அதன்படி  காலை தி.மு.க. பொதுக்குழு கூடியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆற்காடு வீராசாமி, பொன்முடி, சற்குணபாண்டியன், ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், தயாநிதி மாறன், குஷ்பு மற்றும் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:_

வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடிஉள்ளது. பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது. பத்திரிகைகளும் ஆவலாக உள்ளன.

தேர்தல் எப்போது வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளும் கட்சிதான் தி.மு.க. இதில் யாருக்கும் எந்த ஐயப்பாடும் இல்லை. தி.மு.க.வுக்கு பொதுக்குழு என்பது இதயம் போன்றது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம்.

தனது கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் இயக்கம் அல்ல. சாதாரண விஷயத்துகே தலைவர் கலைஞர் 4 பேரின் கருத்தை கேட்பது வழக்கம்.

அப்படிப்பட்ட கழகத்தின் பொதுக்குழு கூடிஉள்ளது. உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. காரணம் இது ஜனநாயக உணர்வுள்ள கட்சி. இந்த பொதுக்குழுவுக்கு தலைவர் கலைஞரை தலைமை தாங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார். 

இந்த கருத்தை வி.பி.துரைசாமி முன்மொழிந்தார். அதன்பின் இரங்கல் தீர்மானத்தை அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் வாசித்தார். முதலில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகனின் துணைவியார் சாந்தகுமாரி, வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி, சமய நல்லூர் செல்வராஜ் உள்பட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானம் வாசித்து முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் மற்ற தீர்மானங்களை பொன் முத்துராமலிங்கம் வாசித்தார்.

பொதுக்குழுவில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை கருணாநிதி கேட்டு அறிந்தார். பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைமைக் கழக தணிக்கைக்குழு அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்