முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் கருத்தை கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.18- டெல்லியில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வரும் சூழலில், ஆட்சி அமைப்பது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்டு அதன்படி முடிவெடுக்க இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், "வரும் ஞாயிற்றுக் கிழமை வரை டெல்லி மக்களிடம் ஆட்சி அமைப்பது குறித்து கருத்து கேட்கப்படும். எஸ்.எம்.எஸ். மூலமும், 25 லட்சம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் மக்களின் கருத்துகளை அறியவுள்ளோம். மேலும், ஆட்சி அமைக்கும் பொறுப்பை தங்கள் கட்சி தட்டிக் கழிக்கவில்லை" என்றார்.

ஆட்சியமைக்க, 18 நிபந்தனைகளை அரவிந்த் கெஜ்ரிவால் விதித்த நிலையில், அவற்றில் 16 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்களின் கருத்தை அறியவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சியின் கடிதம் குறித்து பாஜக இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 4-ல் நடைபெற்ற டெல்லி தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதில், முதலிடம் பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி 32, புதிய கட்சியான ஆம் ஆத்மி 28, கடந்த மூன்று முறையாக ஆட்சி செய்த காங்கிரஸ் 8, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சைக்கு தலா ஒரு இடம் என வெற்றி பெற்றன.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக ஆட்சி அமைக்கப்போவதில்லை என தெரிவித்து விட்ட நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க துணை நிலை ஆளுநரிடம் 10 நாள் அவகாசம் கோரியுள்ளது ஆம் ஆத்மி கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!