முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக ஊழல்வாதிகளில் ராசாவுக்கு 2வது இடம்

சனிக்கிழமை, 21 மே 2011      ஊழல்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.21 - உலக ஊழல்வாதிகளின் பட்டியலில் ராசாவுக்கு 2 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள், மிக சக்திவாய்ந்த மனிதர்கள், புகழடைந்த மனிதர்கள் என பல வகைகளில் பட்டியல்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் ஆட்சியில் இருந்தவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்தவர்களின் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த டைம்ஸ் இதழ் மிகப் பெரிய 10 ஊழல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் இந்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராசாவுக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலே இதற்கு காரணம். இந்த ஊழலில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்புடைய கனிமொழி எம்.பியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த ஊழல் பட்டியலில் அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்டு நிக்சன் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் பதவியில் இருந்த போது எதிர்க்கட்சிகளின் அலுவலகமான வாட்டர்கேட் அலுவலகத்தில் இருந்து ரகசியங்களை பெற கண்காணிப்பு கேமிராக்களையும் ஒற்றர்களையும் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழலுக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. டைகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி டென்னிஸ் கோஸ்லோவ்ஸ்கி 3 இடத்தை பெற்றுள்ளார். லிபியா அதிபர் முகமது கடாபி, வட கொரிய தலைவர் கிங்சோங், இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, இஸ்ரேல் அதிபர் மோசே கட்ஜாவ் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி ஏதாவது ஒரு ஊழலில் ஈடுபட்டிருந்தனர். இஸ்ரேல் அதிபர் கற்பழிப்பு குற்றத்தை செய்தவர். அவர் மீது லஞ்ச ஊழல் கிடையாது. அதைப் போல இத்தாலிய பிரதமர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis