முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் தலைமை செயலாளர் மாறுதல் - தமிழக அரசு விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.22 - முன்னாள் தமிழக அரசு தலைமை செயலாளர் மாலதி மாறுதல் குறித்து ஒரு மாலை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

20.5.11 அன்று வெளிவந்த ஒரு மாலை நாளிதழின் முதல் பக்கத்தில் தமிழக அரசு அதிரடி உத்தரவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் என்ற தலைப்பின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் மாஜி தலைமை செயலர் மாலதி என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை செயலாளர் எஸ்.மாலதி, ஐ.ஏ.எஸ் 16.5.11 அன்று கூடுதல் தலைமை செயலர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக பணிமாற்றம் செயப்பட்டு அதன்படி அன்றைய தினமே அவர் அப்பதவியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எனவே, இம்மாலை நாளிதழில் வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்.

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்