பிரதமர் மன்மோகன்சிங்குடன் ராகுல் காந்தி சந்திப்பு

manmohan-rahul1

புதுடெல்லி, பிப்.24 - பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது நெசவாளர்களின் பிரச்சனை குறித்து அவர் எடுத்துக்கூறினார். இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். பருத்தி நூல், பட்டு நூல் ஆகியவற்றின் விலை உயர்வினால் இவர்கள் தங்களுடைய தொழிலை செய்வதில் இன்னல்ளை அடைந்துவருகின்றனர். இவர்களின் இன்னலை போக்கும் வகையில் இந்த பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி எடுத்துக் கூறினார். ராகுல்காந்தியுடன் உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரீட்டா பகுகுணா ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பிரதமரை சந்தித்தனர். நெசவாளர்களின்  கடன்கள் ரூ. 3,400 கோடி இருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான விலை உயர்வு காரணமாக இந்த கடன்களை அடைக்க முடியாமல் நெசவாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களுடைய கஷ்டத்தை போக்கும் வகையில் அவர்களுடைய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரதமரை ராகுல்காந்தி கேட்டுக்கொண்டதாக ரீட்டா பகுகுணா தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், உ.பி. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரம்மோத் திவாரி மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரும் இந்த பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்று இருந்தனர். நெசவாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று ராகுல் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்