முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 23 -  ஜீன் 15 ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்றும், பழைய பாடப் புத்தகங்களை பின்பற்றலாம் என்றும் சமச்சீர் பாடத் திட்டம் தற்போது நிறுத்தி வைக்க ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். மறுநாள் அனைவரும் கோட்டைக்கு சென்று தங்களது பொறுப்புகளை ஏற்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சர்களுடன் 2 நாட்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சரவை கூட்டம் நேற்று காலை நடந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். அனைத்து அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.   ஜூன் 3-ம் தேதி கவர்னர் உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சிறப்பு செயலாக்க துறையின் கீழ் திட்டங்களை வேகமாக செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:​
தமிழக மக்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற தமிழக மக்களின் வாழ்வு வளம்பெற ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைவதற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் தமிழக அமைச்சரவை தனது நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் குறுவை பாசனத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்ற காவேரி டெல்டா பாசன விவசாயிகள் வேண்டுகோளை கருத்தில் கொண்டும்,
மேட்டூர் அணையில் nullநீர் இருப்பதையும் இயல்பான தென்மேற்கு பருவ மழையை எதிர்நோக்கியும், காவேரி நடுவர் மன்றத்தின், ஆணைப்படி நீnullர்வரத்து வரபெறும் என்பதை கருத்தில் கொண்டும், காவேரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை பாசனத்தை உரிய காலத்தில் மேற்கொள்வதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்து விட அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நாடு குடியரசு ஆன பின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற முதலமைச்சரவை கூட்டம் சரித்திர முக்கியத்துவம் வாயந்த இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போது நடைமுறைப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை.
தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது. எனவே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. எனவே இந்த கல்வி ஆண்டில் பழைய பாட புத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், பாடப்புத்தங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்றும் அமைச்சரவை முடிவெடுத்தது.
ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அரசின் கொள்கைகள் குறித்தும் அமைச்சரவையில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்