முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலிகள் அமைப்பின் புதிய தலைவர் மீது இலங்கை தீவிர கண்காணிப்பு

திங்கட்கிழமை, 23 மே 2011      இந்தியா
Image Unavailable

கொழும்பு,மே.- 23 - விடுதலை புலிகள் அமைப்பின் புதிய தலைவரின் செயல்பாடுகளை இலங்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது.  இலங்கை ராணுவத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அதன் பிறகு அந்த அமைப்பின் தலைவராக குமரன் பத்மநாதன் பொறுப்பேற்றார். ஆனால் அவரையும் இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இந்த அமைப்புக்கு தலைவராக நார்வேயில் வசிக்கம் இலங்கை தமிழர் பேரின்பநாயகம் சிவபரன் என்கிற நெடியவன் பொறுப்பேற்றார். எல்.டி.டி.ஈ. அமைப்பின் புதிய தலைவராக இவர் கருதப்படுகிறார். கடந்த வாரம் இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் உறவினர்களை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டி இது குறித்து விளக்கமளிக்குமமாறு நெடியவனுக்கு நார்வே நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இலங்கையில் உள்ள தங்களது உறவினர்கள் அச்சுறுத்தப்படுவதாக நார்வேயில் உள்ள தமிழர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கு விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருமாறு நார்வேயில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2002 ம் ஆண்டு இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக விடுதலை புலிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நார்வே மேற்கொண்டது. ஆனால் நார்வே குழுவினரின் அமைதி பேச்சுவார்த்தை எவ்வித பலனையும் அளிக்கவில்லை.
இதையடுத்து நடந்த கடுமையான சண்டையில் இலங்கை ராணுவத்தின் கை மேலோங்கியது. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்நிலையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு நார்வே உதவுவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. அதை நார்வே அரசு மறுத்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்