கடும் பனிப்பொழிவு: அமெரிக்காவில் 1,900 விமானங்கள் ரத்து

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

பிலடெல்பியா, பிப்.6 - அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக 1900விமானங்கள் ரத்து செய்யப்பட்டன . இந்த பனிப்பொழிவின் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர்.

நியூயார்க் மற்றும் பிலடெல்பியா ஆகிய பகுதிகளில்  8 அங்குல அளவுக்கு சாலைகளை உறைபனி முடியது. இதன் காரணமாக  4,300க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதமாகியது.

பிலடெல்பியா, நியூயார்க், நியூஜெர்சி, லகுவார்டியா மற்றும் கென்னடி ஆகிய விமானநிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய 1,900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக அங்கு நடை பெற்று முடிந்த சூப்பர் பெளஸ் கால்பந்து போட்டியை காண வந்த மக்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கெண்டுகி நகரில் ஏற்பட்ட பனிப்பொழிவில் கார் சிக்கியதால் நேர்ந்த விபத்தில் 24 இளைஞர்கள் உயிரிழந்தார். பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்கள், நிதிமன்றங்கள் மற்றும் பள்ளிகள் முடப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: