முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பொருள் வழங்கல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.6 - முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி, 05.02.2014 அன்று மயிலாப்பூர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிய குடும்ப அட்டை வழங்கக்கோரியும், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கென மனு செய்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களது வேண்டுகோள் மீது உடனடியாக தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்களுக்கு, 60 நாட்களுக்குள் உரிய ஆய்வுக்குப்பின் தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டுமென்றும், மனுக்களை நிராகரிக்கும் பொழுது அதன் விவரம் மனுதாரர்களுக்கு தாமதமின்றி தெரியப்படுத்த வேண்டுமென்றும் அமைச்சர் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார். 

மேலும் அமைச்சர் காமராஜ் கூறுகையில், 

முதல்வர் ஜெயலலிதா மூன்றாம் முறையாக தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, இன்று வரை புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 8,82,740 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதியும், நுகர்வோரின் குறைகளைக் களையவும்,

பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா அரசு, சென்னை மாநகரில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்றும், மாவட்டங்களில் இரண்டாம் வெள்ளிக்கிழமையன்றும் நுகர்வோர் குறைதீர் முகாம்களை நடத்தி வருகிறது.

தற்பொழுது சென்னை மாநகரில் 16 உதவி ஆணையாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சென்னை மாநகரில் மட்டும் 1723 நியாயவிலை அங்காடிகள்அவற்றில் இணைக்கப்பட்டுள்ள 21,46,627 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செடீநுதுகொண்டு பயன்பெறும் வகையில், முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி அம்பத்தூரில் சகல வசதிகளுடன் கூடிய மண்டல அலுவலகக் கட்டிடம் ரூபாய் 80 இலட்சம் செலவிலும், ஆயிரம்

விளக்கு உதவி ஆணையாளர் அலுவலகம் 89 இலட்சம் ரூபாய் செலவிலும், சைதாப்பேட்டை உதவி ஆணையாளர் அலுவலகம் 53 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ளது.

நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க சென்னை மாநகரில் உள்ள அந்தந்த மண்டல அலுவலக உதவி ஆணையாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் சேப்பாக்கம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் புகார் பிரிவையும் தொடர்பு கொள்ளுவதற்கு வசதியாக கீழ்கண்ட தொ&லைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன.

குறுஞ்செய்தி அனுப்ப வேண்டிய செல்பேசி எண்: 94 4546 4748, இணைப்பு தொலைபேசி எண்: 72 9900 8002

இந்தியாவிலேயே அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக திகழும் மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையிலான அரசு தமிழ் நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ஏனைய நுகர்வோரின் நலன் காக்க உறுதிபூண்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ச.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் எம்.சந்திரசேகரன், மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago