ஐ.பி.எல். டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 -வது முறையாக இறுதிக்கு தகுதி

வியாழக்கிழமை, 26 மே 2011      விளையாட்டு
Suresh Raina1

மும்பை, மே. - 26  - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெ ற்ற பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித் தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு 3 -வது முறையாக முன்னேறி உள்ளது.  இந்தப் போட்டியில் சென்னை கிங்ஸ் தரப்பில், சுரேஷ் ரெய்னா, அதி ரடியாக ஆடி, அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்குப் பக்கபலமாக, பத்ரிநாத்,கேப்டன் தோனி மற்றும் மார்கெல் ஆகியோர் ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, எந்த ஒரு வீரராலும் ஆதிக்கம் செ லுத்த முடியவில்லை. பொலிஞ்சர் 20 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, அஸ்வின், பிராவோ மற்றும் ஜகாதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியின் முதல் பிளே ஆப் ஆட்டம் மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டன் டேனியல் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
கேப்டன் தோனி தலைமையிலான சென்னை அணி முதலில் டாசில் வெற்றி பெற்று பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூர் ராயல்ஸ் தரப் பில், கிறிஸ் கெய்ல் மற்றும் அகர்வால் இருவரும் ஆட்டத்தை துவக்கி னர்.
முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி சென்னை அணியின் பந்து வீச் சை சமாளித்து ஆடி கெளரவமான ஸ்கோரை எட்டியது. அந்த அணி இறுதியில், 20 ஓவரில் 4 விக்கெட்  இழப்பிற்கு 175 ரன்னை எடுத்தது.
அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.
பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோக்லி அதி கபட்சமாக, 44 பந்தில் 70 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக் காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். பெங் களூர் அணி வலுவான நிலையை அடைய இவரது ஆட்டம் முக்கிய மானதாக இருந்தது.
துவக்க வீரர் அகர்வால் 33 பந்தில் 34 ரன்னை எடுத்தார். இதில் 5 பவு ண்டரி அடக்கம். தவிர, பொமர்ஸ்பேச் 18 பந்தில் 29 ரன்னையும், டிவில்லியர்ஸ் 10 பந்தில் 11 ரன்னையும் எடுத்தனர். கெய்ல் 8 ரன்னையும், எஸ். திவாரி 9 ரன்னையும் எடுத்தனர்.
சென்னை சூப்பர் தரப்பில்,பொலிஞ்சர் 20 ரன்னைக் கொடுத்து 1 விக் கெட் எடுத்தார். தவிர, அஸ்வின், பிராவோ மற்றும் ஜகாதி ஆகியோ ர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். மார்கெல் மற்றும் ரெய்னா ஆகி யோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் 176 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சவாலான இலக்கை பெங்களூர் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்னை எடுத்தது.
இதனால் சென்னை அணி 2 பந்து மீதமிருக்கையில், 6 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்று ஐ.பி.எல். தொடரின் இறுதிச் சுற்றுக் கு மூன்றாவது முறையாக தகுதி பெற்று உள்ளது.
சென்னை அணி தரப்பில். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெ ய்னா அதிரடியாக ஆடி, 50 பந்தில் 73 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் டக்கம்.
அடுத்தபடியாக, அவருக்குப் பக்கபலமாக ஆடிய பத்ரிநாத் 32 பந்தில் 34 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, கேப்டன் தோனி 19 பந்தில் 29 ரன்னையும், மார்கெல் 10  பந்தில் 28 ரன்னையும் எடுத்தனர்.
பெங்களூர் அணி சார்பில், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாகி ர்கான் 31 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, எஸ். அர விந்த் மற்றும் மிதுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை அணிக்கு எதிரான முதல் பிளே ஆப்பில் தோல்வி அடைந்த பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த பிளே ஆப்பில் தோல்வி அடை யும் அணியுடன் மோத இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு இறுதிச் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: