பகத்சிங் வீட்டை சீரமைக்க ரூ.8 கோடி: பாக்., அரசு வழங்குகிறது

Image Unavailable

 

லகூர், பிப்.19 - இந்தியாவின் விடுதலை போராட்ட வீரரான பகத்சிங் வீட்டை சிரமைக்க ரூ.8 கோடி நிதி வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர் பஞ்சாப்பை சேர்ந்த மாவீரர் பகத்சிங். பின்னர் இவர் வெள்ளையர்களால் துக்கிலிடப்பட்டார். பகத் சிங் பிறந்த சொந்த வீடு சுதந்திரத்திற்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் வசம் சென்று விட்டது.அங்கு பைசலாபாத் மாவட்டத்தில் ஜரன்வாலா தாலுகாவில் பங்காய் என்ற கிராமம் ஆகும். செப்டம்பர் 28ம் தேதி பகத் சிங் பிறந்தார். பின்னர் அங்குள்ள பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். தற்போது அவரது கிராமமும், வீடும், பள்ளியும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிரது. இதனையடுத்து அவரது இல்லை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து பகத் சிங் வீட்டை சீரமைக்க ரூ.8 கோடி நிதியை பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து மாவட்ட ஒருங்கிமைப்பாளர் கூறுகையில் இந்த நிதியைக் கொண்டு அவரது வீடு பழுது பார்க்கப்படும். மேலும் அவரது கிராமத்திற்கு தேலையான குடி நீர் மற்றும் வடிகால் வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

லாகூரில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள இந்த இல்லத்திற்கு ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ