பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பேர் பலி

திங்கட்கிழமை, 3 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மார்ச்.4 - பாகிஸ்தானில், நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். 

இந்த தாக்குதலில் நீதிபதி ஒருவர் உள்பட 11 பேர் பலியாகினர், 25 பேர் படுகாயமடைந்தனர். 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத் பாதுகாப்பான நகராக இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. 

சுமார் 15 நிமிடங்கள் தாக்குதல் நடைபெற்றது. தாக்குதல் முடிவுக்கு வந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: