முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகன் ஹரியை மீட்டுத்தரக்கோரி நடிகை வனிதா கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகை

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை, மே.- 29 - மகன் ஹரியை மீட்டுத்தரக்கோரி நடிகை வனிதா கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார். பின்னர் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அறிவித்தார் . போலீசார் அவரை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.  இது குறித்த விபரம் வருமாறு:
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பது தொடர்பாக அவருக்கும், அவரது முதல் கணவர் ஆகாசுக்கும் இடையே nullண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது. விஜய் ஸ்ரீஹரியை  வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் விஜய் ஸ்ரீஹரி, வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். தற்போது விருகம்பாக்கத்தில் ஆகாசுடன் வசித்து வருகிறான்.ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த பல மாதங்களாக வனிதா போராடி வருகிறார்.
இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றில் வனிதா புகார் செய்துள்ளார். விஜய் ஸ்ரீஹரி தன்னுடன் வராதது குறித்து வனிதா கூறும்போது, அவனை மிரட்டி வைத்துள்ளனர். என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குகிறான் என்று குற்றம் சாட்டினார். தனது தந்தை விஜயகுமார் மீதும், ஆகாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக அடங்கிப் போய் இருந்த வனிதா விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வனிதா புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கோர்ட்டு உத்தரவின் பேரில் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கர் ஆலோசனையின் பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஜெபகர்சாலி நேற்று மாலை வனிதாவிடம் விசாரணை நடத்தினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள ஆகாசின் வீட்டுக்கு பெண் போலீசார் வனிதாவுடன் சென்றனர். அங்கிருந்த விஜய் ஸ்ரீஹரி, வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். இதனால் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர். வனிதாவும் வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வனிதா திடீரென வந்தார். எனது மகனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கூறிய அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். இதையடுத்து போலீசார் மீண்டும் ஆகாசின் வீட்டுக்கு வனிதாவை அழைத்துச் சென்றனர். அப்போதும் விஜய் ஸ்ரீஹரி அவருடன் செல்ல மறுத்து விட்டான். இதுதொடர்பாக வனிதா கூறியதாவது:-
வாரத்தில் 3 நாட்கள் (வெள்ளி, சனி, திங்கள்) விஜய் ஸ்ரீஹரி என்னுடன் இருக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை நான் ஓயமாட்டேன். ஆகாசிடமிருந்து அவனை மீட்காமல் விடமாட்டேன். நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நேற்று வனிதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் உங்களை சோதனை செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிப்போம் என்று கூறினர். இதற்கு வனிதா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர் மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கரை சந்தித்து பேசினார். அப்போது நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அவர் விளக்கி கூறினார்.
பின்னர் மதியம் 12.45 மணி அளவில் வெளியே வந்த அவர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மகன் ஸ்ரீஹரியை கூடிய விரைவில் என்னிடம் மீட்டு ஒப்படைக்க வேண்டும். கடந்த 7 மாதமாக குழந்தையை மீட்க போராடுகிறேன். விருகம்பாக்கம் போலீசார் குடிவிட்டு வந்து கலாட்ட செய்வதாக பொய்யான புகார் தெரிவித்துள்ளனர். இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்தஒரு தாய்கும் தீங்கு ஏற்படாது.  என் மகன் எனக்கு கிடைக்காவிட்டால் துளிகூட தண்ணீர் குடிக்காமல் உண்ணாவிரதம் இருப்பேன் என்று வனிதா விஜயகுமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony