சென்னை புளியந்தோப்பு பகுதியில் பயங்கர தீ: 200 குடிசைகள் எரிந்து

திங்கட்கிழமை, 30 மே 2011      தமிழகம்
Image Unavailable

சாம்பல்நகை-பணம்-பொருட்கள் எரிந்து நாசம்பெரம்பூர், மே.- 30 - சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200 குடிசைகள் எரிந்து சாம்பலானது.  இது குறித்த விபரம் வருமாறு:- புளியந்தோப்பு கே.பி.பார்க் அருகே டிமல்ஸ் சாலை உள்ளது. இங்கு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான நான்கு பிளாக்குகள் இடியும் தருவாயில் உள்ள நிலையில் இருந்தது. இதனை முன்னால் தி.மு.க. அரசு சரிசெய்வதற்காக அங்குள்ள மக்களை வெளியேற்றி கே.பி.பார்க் அருகே உள்ள காலி மைதானத்தில் பொதுமக்கள் தங்க அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில் சுமார் 200 குடிசைகள் அமைத்து பொதுமக்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாக குடியிருந்து வந்தனர்.நேற்று முன்தினம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி குடிசை மாற்று வாரிய அரசு அதிகாரிகளுடன் வந்து குடிசைவாழ் பொதுமக்களை சந்தித்தார். அப்போது மக்கள் தங்களது அடிப்படை வசதி குறைகளை எடுத்துரைத்தனர். இதனைக்கேட்டு அருகில் உள்ள அதிகாரிகளிடம் குடிசைமாற்று வாரியம் பிளாக்கான 1,2,3,4 ஆகியவற்றில் நடந்து வந்த மராமத்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை இக்குடிசை பகுதியில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலை நேரத்தில் காற்று பலமாக வீசியதால் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீபற்றி எரிந்தன. உடனடியாக குடிசை வாசிகள்  அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பெரம்பூர், வேப்பேரி, புளியத்தோப்பு ஆகிய தீயணைப்பு துறையினர்க்கு தகவல் கொடுத்து, தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீ மளமளவென பரவி அனைத்து குடிசைகளும் எரிந்து சாம்பலானது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேரை காணவில்லை என தேடுகின்றனர். சான்றிதழ், நகை, பணம், டி.வி. பீரோ, பாத்திரங்கள் அனைத்தும் எரிந்தும், உருகியும் நசாமானது கண்டு மக்கள் கண்ணீர் சிந்தி கதறினார்கள். குடிசைவாசிகள் தங்களின் வீடுகளில் இருந்த எந்த பொருட்களையும் பாதுகாக்க முடியவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் விரைந்து வந்தனர். தீயில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளை கவனித்தனர். அத்தொகுதி எம்.எல்.ஏ. மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் மாற்று ஏற்பாடுகளை செய்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: