முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை: வங்கம் சூப்பர் 10-க்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், டாக்கா, மார்ச். 22  - உலகக் கோப்பை டி _ 20 தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹாங்காங்கிடம் வங்கதேசம் தோற்ற போதிலும், ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது. 

உலகக் கோப்பை 20 _20 க்கு போட்டியில்சூப்பர் 10 சுற்றுக்கான தகுதி சுற்று குரூப் ஏ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. 

இதில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 16.3 ஓவரில் 108 ரன்களுக்கு சுருண்டது. ஷாகிப் அல் ஹசன் 34 ரன்னும், அனாமுல் ஹக் 26 ரன்னும், முஷ்பிகர் ரகீம் 23 ரன்னும், நசீர் ஹொசைன் 14 ரன்னும் எடுத்தனர். 

தமீம் இக்பால், பர்கத் ரேசா, அப்தூர் ரசாக், ரூபல்ஹொசைன், ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். தவிர, ஷபிர் ரகுமான் 2 , முகமதுல்லா 1, அல் அமீன் 1 ரன் எடுத்தனர். 

ஹாங்காங் அணி சார்பில் நதீம் அகமது 4 விக்கெட்டும் நிசாகத் கான் 3 விக்கெட்டும் எடுத்தனர். தவிர, தன்வீர் அப்சல் 2 விக்கெட்டும், இர்பான் அகமது 1 விக்கெட்டும் கைப்பற்றினர். 

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் ஆடியது. வாக்காஸ் 0, இர்பான் அகமது 34, அட்கின்சன் 7, ஷாப்மேன் 5. பாபர் ஹயத் 1, நிசாகத்  கான் 12, முனிர் தார் 36, தன் வீர் அப்சல் 0, ரன்களில் ஆட்டமிழந்தனர். 

19.4 ஓவரில் ஹசிப் அம்ஜத் சிக்சர் விளாச முடிவில் ஹாங்காங் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. அஜ்மத் 12, நதிம் அகமது 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ஏ பிரிவில் வங்கதேசம் , நேபாளம் அணிகள் தலா 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது. எனினும் ரன்ரேட் அடிப்படையில் வங்கதேச அணி ( பிளஸ் 1.466) முன்னிலை பெற்று சூப்பர் 10 சுற்றில் விளையாட தகுதி பெற்றது. நேபாளம் பிளஸ் 0.933 ரன் ரேட் தான் வைத்திருந்தது. 

குரூப் பி யில் நேற்று  நடைபெற்ற கடைசி ஆட்டங்களில் ஜிம்பாப்வே _ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , அயர்லாந்து _ ஹாலந்து அணிகள் மோதின. 

இதில் அயர்லாந்து 4 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே, ஹாலந்து தலா 2 புள்ளிகள்  வைத்துள்ளன. இதனால் இந்த ஆட்டம் இந்தஅணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்