உக்ரைன் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை இல்லை: புதின்

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மார்ச் 31 - உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தின் மீது புதிதாக ராணுவ  நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று ஐ.நா. பொதுச்செயலாளர்  பான் கீ மூனிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளி்த்துள்ளார்.

இந்தப் பிரச்சனைக்கு ராஜீய ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். அங்கு நிலவும் பதற்றத்தால் சிறிதாக பற்றவைக்கப்படும் தீப்பொறி பெரும் தீப்பிழம்பாக மாறி எதிர்பார்க்க முடியாத  விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டெலிபோன் மூலம் பான் கி மூன் எச்சரித்தபோது புதின் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் உக்ரைனால் தொடங்கப்பட்ட பிரச்சனை தற்போது அதையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. பிரச்சனை தொடங்கியபோதே ஐ.நா.வின் அடிப்படை நெறிமுறைகளின்படி பேச்சு வார்த்தை மற்றும் ராஜீய ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியதை புதினிடம் பான் கி மூன் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் உக்ரைன் மற்றும் ரஷிய தலைவர்கள் கடும் நடவடிக்கைகளை தவிர்த்து பதற்றத்தை தணிக்கும் வகையில் உடனடியாக நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வர  வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது: 

அதிபர் ஒபாமா டெலிபோன் மூலம் புதினுடன் பேசினார். உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷிய படைகளை குவித்து பயிற்சி மேற்கொண்டு வருவதால் நிலவும் பதற்றத்தை தணிக்க வேண்டும். தி ஹேக் நகரில் எங்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் உங்களது  வெளியுறவுத் துறை அமைச்சர்  செர்ஜி லாவ்ரோவ் சந்திப்பின்போது, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். 

அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ரஷியா பதிலளிக்க வேண்டும். உக்ரைனில் அமைதி நிலவ அந்நாட்டு அரசுக்கும், அதந் மக்களுக்கும் அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: