எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பு, ஏப்.1 - இலங்கையில் மேற்கு மற்றும் தெற்கு மாகாண கவுன்சில் தேர்தல்களில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெற்கு மாகாணத்தில் மோத்தமுள்ள 55 இடங்களில் அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 33 இடங்களை கைபற்றி வெற்றி பெற்றுள்ளது. எனினும் 2009-ஆம் ஆண்டு மாகாண கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற 38 இடங்களை விட இது குறைவாகும், மீதமுள்ள 22 இடங்களை மூன்று எதிர்க் கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
ராஜபட்சவின் சொந்த தொகுதியான அம்பண்த தோட்டத்தில் ஆளும் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பது அவருக்கு ஒரு கசப்பு மருந்தாகவே இருக்கு. ஏனெனில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட உள்ளார். மேற்கு மாகாண கவுன்சில் தேர்தலைப் பொறித்தவரை, மொத்தமுள்ள 104 இடங்களில் ஆளும் கூட்டணி 68 இடங்களை கைப்பற்றியது. எனினும் 2009, தேர்தலுடன் ஒப்பிடுகையில் அக்கட்சி 12 இடங்களை இழந்துள்ளது. அந்த மாகாணத்தில் முக்கிய எதிர்க்கட்சியானரணில் விக்ரம்சிங் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 28 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி 9 இடங்களுடன் மூன்றாவது ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி இம்முறை நான்ங்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025