மியான்மரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

யாங்கூன், ஏப்.1 - மியான்மர் நாட்டில் கடந்த 30 வருடங்களுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் கண்காணிப்பிலி பள்ளி ஆசிரியர்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரவ் 10-ஆம் தேதி முடிவடையும் இந்த கணக்கெடுப்பில் வீடுவீடாகச் சென்று 1 கோடியே 20 லட்சம் மக்களை கணக்கெடுப்பாளர்கள் சந்திக்கவுள்ளனர், என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சிட்வி பகுதியில் கணக்கெடுப்பின் போது புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: