முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.,கில் 9 மாதம் குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு!

வெள்ளிக்கிழமை, 4 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர், ஏப்.5 - பாகிஸ்தானில் ஒன்பது மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் அகமது. இவரது 9 மாத குழந்தை மூசா, கடந்த சில தினங்களுக்கு முன்பு லாகூரில் உள்ள ஒரு பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது அகமதுவுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அகமது போலீசாரை தாக்கியுள்ளார். இது தொடர்பாக அகமது மற்றும் அவரது 9 மாத  குழந்தை மூசா மீது அப்பகுதி சப் இன்ஸ்பெக்டர் காசிப் அகமது கொலை முயர்சி வழக்குபதிவு செய்தார்.இந்த வழக்கில் அகமதுவையும், மூசாவுவையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 12 வரை குழந்தை மூசாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் குழந்தையிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யம் படி போலீசாருக்கு கிண்டலாக உத்தரவிட்டார்.

இது குறித்து குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் இர்பான் தரர், நீதிமன்றத்தில் தெரிவிக்கும் போது, அடுத்த முறை விசாரணையின் போது குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று தெரிவித்தார். இதுகுறித்து எஸ்பி ரானா ஜப்பார் கூறுகையில், இந்த வழக்கில் ஏதோ தவறு நடந்துள்ளது. போலீசார் தவறாக புரிந்து கொண்டு 9 மாத குழந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே குழந்தை மீது வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் காசிப் அகமது சஸ்பெண்ட செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து குழந்தை மூசாவின் தந்தை அகமது கூறுகையில், மின்வெட்டை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக 9 மாத குழந்தை உள்பட 27 பேர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்