முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

Image Unavailable

 

சென்னை, ஜூன்.2 - ஜெயலலிதா 3-வது முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றதற்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர், செயற்குழு உறுப்பிநர்கள் நளினி, குயிலி, பாத்திமாபாபு, சத்யாகிருஷ்ணா, கே.என். காளை, கே.ஆர்.செல்வராஜ், பெஞ்சமின் உள்பட 30-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் கீழ்கண்ட ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு:-

பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் முதல்வர் ஜெயலலிதா இந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டதற்கு இந்த செயற்குழு பெருமையுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், விஜயகாந்த் தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டதற்கு இந்த செயற்குழு பெருமையுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தென்னிதிய நடிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.சரத்குமார் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு இச்செயற்குழு பெருமையுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரான அருண்பாண்டியன் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினருமான மைக்கேள் ராயப்பன் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டதற்கு இந்த செயற்குழு பெருமையுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ