முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் திருமண வீட்டில் சிரிக்க - இழவு வீட்டில் அழ தடை!

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஏப்.9 - சீனாவில் திருமண வீட்டில் சிரிக்கவும், இழவு வீட்டில் அழவும்  தீவிரவாதிகள் தடை விதித்துள்ளனர். சீனாவில் பாகிஸ்தான் எல்லையில் ஸின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில்  உள்ளனர். 

இங்குள்ள தீவிரவாதிகள், பிரிவினை வாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உசியார் பகுதியைப் பிரித்து தனி நாடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். பெய்ஜிங்கின் டினாமென் பகுதியில் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். தெற்கு சீனாவின் குன்மிங் ரயில் நிலையத்தில்  பயணிகளை தாக்கியதில் 29 பேர் இறந்தனர். இஸ்லாம் தீவிரவாதிகளான இவர்கள் உகியாரில் வாழும் முஸ்லிம்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். டி.வி. நிகழ்ச்சிகளை தடை செய்தல், ரேடியோ கேட்பது, பததிரிகை படிப்பது, பாட்டுப் பாடுவது நடனமாட  தடை விதித்துள்ளனர். திருமண வீ்ட்டில் சந்திக்கும்போது, சிரிக்கக் கூடாது, இழவு வீட்டில் அழக்கூடாது என்றும் தடை விதித்துள்ளனர். இதுபற்றி சீன அரசுக்கு   ஸின்ஜியாங் மாகாண கவர்னர் கடிதம் எழுதியுள்ளார். அதில் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்