முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவிற்கு கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சேலம் ஜூன்.4​- சேலத்தில் நேற்று கர்நாடகாவிற்கு கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அரிசி கடத்திய 4 பேரை கைது செய்தனர். ரேஷன் அரிசியை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று முன் தினம் தமிழக உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிவில் சப்ளை பறக்கும்படை தாசில்தார் தங்கராஜூக்கு சேலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து அவர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜுவிற்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் தாசில்தார் தங்கராஜ், இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, ஜெகநாத் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை சேலம் இளம்பிள்ளை ரோட்டில் சிவதாபுரம் அருகே உள்ள  ஜெயா தியேட்டர் அருகில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த லாரியில் தலா 50 கிலோ வீதம் 68 மூட்டைகளில் 3,400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து லாரியில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த மணி(எ) பைக் மணி(50). லாரி உரிமையாளர், தர்மலிங்கம்(40) லாரி டிரைவர் என்பதும், ரேஷன் அரிசியை சேலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து லாரியையும், அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.50 லட்சமாகும். இதில் கைது செய்யப்பட்ட லாரி உரிமையாளர் மணி(எ) பைக் மணிக்கு ரேஷன் அரிசி கடத்துவதே தொழிலாகும். இவர் ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிட தக்கது.

இதைத் தொடர்ந்து இந்த டீம் சேலம் அயோத்தியாபட்டணம் பைபாஸ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 12 டன் ரேஷன் அரிசி பிடிப்பட்டது. இதையடுத்து லாரியில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்  அவர் விழுப்புரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் செல்வம்(44). டிரைவர் கார்த்திகேயன்(30) என்பதும், இந்த ரேஷன் அரிசி விழுப்புரத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்தப்படுவதும் தெரியவந்தது., இதையடுத்து போலீசார் அரிசியையும், லாரியையும் பறிமுதல் செய்தனர். அரிசியின் மதிப்பு மற்றும் லாரியின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும். தொடர்ந்து அதிகாரிகள் சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடபோவதாகவும், அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis