முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் கமிஷனர்கள் அசையா சொத்து விபரம் வெளியீடு

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.4 - தலைமை தேர்தல் கமிஷனர் எஸ். யு. குரேஷி மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் தங்களுடைய அசையா சொத்து விபரத்தை வெளியிட்டுள்ளனர். இதில் குரேஷிக்கு 3 இடங்களில் வீட்டுமனை இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக குரேஷி இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக வி.எஸ். சம்பத், எச்.எஸ். பிரமா ஆகிய இரண்டு தேர்தல் கமிஷனர்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் தங்களுக்கு உள்ள அசையா சொத்து விபரத்தை நேற்று வெளியிட்டுள்ளனர். இதில் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷிக்கு 3 இடங்களில் வீட்டுமனைகள் உள்ளன. கூர்கான், கிரேட் நொய்டா, ஆக்ரா ஆகிய இடங்களில் தலாஒரு வீட்டுமனை உள்ளது. கடந்த 1980-ம் ஆண்டுக்கு முன்பு கூர்கானில் குரேஷிக்கு சுமார் 500 சதுர கெஜம் இடத்தை கோடா ஒதுக்கியுள்ளார். இந்த வீட்டுமனையின் மதிப்பு தற்போது ரூ.ஒரு கோடியே 75 லட்சமாகும். கிரேட் நொய்டாவில் கடந்த 206-ம் ஆண்டு 350 சதுர கெஜம் அளவுள்ள வீட்டுமனையை ரூ.36 லட்சத்திற்கு குரேஷி விலைக்கு வாங்கி உள்ளார். இதற்கு வங்கி கடனும் வாங்கியுள்ளார். மேலும் குரேஷி தன்னுடைய சேமிப்பு பணம் ரூ.8 லட்சத்தில் இருந்து 525 சதுர கெஜம் வீட்டுமனையை ஆக்ராவில் வாங்கியுள்ளார். கிரேட் நொய்டா மற்றும் ஆக்ராவில் உள்ள வீட்டுமனைகளின் தற்போதையை விலை மதிப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்த விபரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.மற்ற இரண்டு தேர்தல் கமிஷனர்களின் அசையா சொத்து விபரம் குறித்தும் தேர்தல் கமிஷன் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago