எனக்கு எதிராக சதி - பாபா ராம்தேவ் ஆவேசம்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மே.5 - எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அதை உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன். யாருக்கும் அஞ்சமாட்டேன் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். ஊழலை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பாபா ராம்தேவ் அறிவித்ததும் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு பல வகையிலும் முயன்றது. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. திட்டமிட்டபடி டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று துவக்கினார் ராம்தேவ். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்தநிலையில் தனக்கு எதிராக சதி நடப்பதாக ராம்தேவ் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் கூறியதாவது:-

எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள். நான் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்பதற்காக பல முயற்சிகளை செய்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உரியநேரத்தில் அம்பலப்படுத்துவோம். என்னுடைய போராட்டத்தின் மூலம் எந்த ஒரு அரசியல் கட்சியும் பலனடைய நான் அனுமதிக்கமாட்டேன். கறுப்புப்பணத்தை வெளிக்கொணர நாங்கள் நடத்தும் இந்த அமைதி போராட்டத்திற்கு எந்த கட்சி ஆதரவு அளித்தாலும் அதை வரவேற்போம். சுமார் 400 லட்சம் கோடி கறுப்புப்பணம் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை திரும்பக்கொணர வேண்டும். இந்த மேடையில் அரசியல் பேச்சு பேச எந்த அரசியல்வாதியையும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்திற்கு சமூக சேவகர் அண்ணா ஹசரேயும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: