முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.26 - மத்திய அரசு நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. 

அதில் 2010 - 11 ம் ஆண்டு 8.6 சதவீதம் அளவிற்கு பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அடுத்த ஆண்டு இது 9 சதவீதமாக உயரும். உற்பத்தி மற்றும் தனியார் பணிகள் ஆகியவற்றில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படும். விவசாயத்தில் வளர்ச்சி மீண்டும் அதிகரிக்கும். சேமிப்பு மற்றும் முதலீடுகள் அதிகரித்து ஏற்றுமதியின் அளவு உயரும். பணவீக்கம் குறையத் தொடங்கும். 2010 - 11 ம் ஆண்டு விவசாய உற்பத்தி 5.3 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை உற்பத்தி 8.6 சதவீதமாக அதிகரிக்கும் உற்பத்தி பிரிவு 9.1 சதவீதமாக உயரும். 2010 ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை ஏற்றுமதி 29.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2010 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை இறக்குமதி 19 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2010 ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை வர்த்தக பற்றாக்குறை 82.01 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. 

மொத்த வங்கிக் கடன் 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஐந்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் புள்ளி அளவில் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. சந்தை விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.7 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போதுள்ள வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை என்றால் பணவீக்க விகிதம் 1.5 சதவீதம் அதிகரித்து இருக்கும். உணவு தானிய உற்பத்தி 232.3 மில்லியன் டன் அளவை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது. அன்னிய செலவாணி இருப்பு 297.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்