மம்தாவின் ரயில்வே பட்ஜெட் - டாக்டர் சேதுராமன்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
Sethuraman

 

மதுரை, பிப்.26 - மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் நடுத்தர மக்களை பழிவாங்கிவிட்டது என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனத்தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  கடந்த 3 பட்ஜெட்களில் கருணாநிதி அரசு மம்தாவிடம் முறையாக எந்த வித கோரிக்கைகளும் வைக்காததால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இப்போது அது தொடர்கதை ஆகிவிட்டது.  தற்போதைய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த வித புதிய திட்டங்களும் பெரிதாக இல்லை. மதுரை சென்னை இடையே எங்குமே நிற்காத விரைவு ரயில் அறிவிப்பு பணக்காரர்களுக்கு மட்டும் தான். ஏழைகளின் கதை வழக்கம் போல்தான். சென்ற பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் ஏட்டளவில் தான் இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் கேரளாவில் பாலக்காட்டிலும், வங்காளத்தில் சிங்கூரிலும் புதிய ரயில்பெட்டி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. மேற்கு வங்கம் மம்தாவின் சொந்த மாநிலம். மேலும் கேரளாவிலும் வங்கத்திலும் கம்யூனிஸ்டுகள் ஆளுகின்ற காரணத்தால் தேர்தலையொட்டி இந்த சலுகைகளை மம்தா அறிவித்துள்ளார். 

ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையில் பல சலுகைகளை மம்தா அறிவித்துள்ளார். இதனால் லாபம் பெறுவது பொதுமக்களை விட தரக்களுக்கே லாபம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: