முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் நிலையத்தில் சிறுமி கொலை: மாயாவதி நடவடிக்கை

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,ஜூன்.16 - உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் காவல் நிலையத்தில் 14 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தாள். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக அவரின் தாயார் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் உ.பியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் கட்டமாக நடந்த பிரேத பரிசோதனையில் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு தன்னார்வ அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இதனால் உ.பி. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் 2 வது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுமி கொலை செய்யப்பட்டதாகவும், கற்பழிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 11 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். முதல் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். 

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் முதல்வர் மாயாவதி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். லக்கிம்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.கே. ராயை அவர் சஸ்பெண்டு செய்துள்ளார். அவர் நிருபர்களிடம் பேசும் போது, பெண்களுக்கு எதிரான செயல் நடக்கும் போதெல்லாம் எதிர்க்கட்சிகள் இதனை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு அவர்கள் உதவ வேண்டும். இதில் அரசியல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்