முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சவால்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்16 - தைரியம் இருந்தால் காங்கிரசுடன் நேரடியாக மோதவும், அதைவிட்டு உயர் மட்டக்குழு என்று மிரட்ட வேண்டாம் என்று கருணாநிதிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சவால் விடுத்தார். சென்னையில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாடாராம் தேவை கண்டித்து காங்கிரசார் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட ஈ.வி.எஸ்.கே.இளங்கோவன் பேசியதாவது:-

``கூடா நட்பு கேடாகி போகும்'' என்று பேசும் கருணாநிதி, ராசா அழகிரி, கனிமொழி ஆகியோருக்கு பாடம் கூற வேண்டும். ராசா சாதிக் நட்பு சாதிக்கின் தற்கொலை வரை சென்றது, ஸ்டாலின், ரமேஷ் ஆகியோரிடம் இது பற்றி கூறியிருக்கவேண்டும்.

தி.மு.க. தோல்வி பற்றி பேசும்போது அதிக தொகுதிகள் கொடுத்ததால் தோல்வி என்று பேசக்கூடாது. ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் காங்கிரஸ்தான் காரணம் என்று கூறுகிறார்கள். தோல்விக்கு காரணம் தி.மு.க.தான் திருமாவளவன் தான் காரணம். திருமாவளவன் கட்ட பஞ்சாயத்து செய்தது தான் காரணம். திருமாவளவன் பஞ்சாயத்து செய்தது காங்கிரஸ் தலையில் விழுந்தது. 63 இடங்களில் நின்று 5 இடங்களில் பஞ்சபாண்டவர் போல் வென்றோம். திருமாவளவன் சிறியவர் புத்தியில். திருமாவளவன் நடந்து போய் கொண்டிருந்தார் அவருக்கு மூப்பனார்தான் கார் வாங்கி கொடுத்தார். அப்படி கார் வாங்கி கொடுத்தவர் இருந்த கட்சியையே கேவலமாக திருமாவளவன் பேசலாமா.

தமிழக காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்து விட்டார். அவருடைய ராஜினாமாவை மேலிடம் ஏற்கவில்லை . மேலிடம் ஏற்று கொள்ளாததால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகிவிட்டான். காங்கிரஸ் மேலிடம் யார் யாருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்று தெரியவில்லை. ராம்தேவ் உண்ணாவிரதத்தை நிறுத்த 4 மத்திய அமைச்சர்கள் போகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். பின்னணி உள்ளவர் ராம்தேவ் அவர் உண்ணாவிரதத்தை கேவலப்படுத்திவிட்டார். 

இங்கும் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார் காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு தலைமை செயலகம் போகிற வழியில் மதியம் சாப்பாடு வரை உண்ணாவிரதம் இருந்தார். கேட்டால் வீட்டில் கூட சொல்லவில்லை என்கிறார்.  எந்த வீட்டில போய் சொல்லுவார்.

மதவாதிகள் கருப்பு பணத்தை குவித்துள்ளவர்கள் வெளிநாடுகளில் தீவுகளை வைத்திருப்பவர்கள் விமானங்களை  வைத்துள்ளவர்கள் கருப்பு பணத்தை எதிர்த்து போராடலாமா? அறக்கட்டளை வைத்திருந்தாலே கருப்பு பணம் வைத்திருப்பார்கள் என்று பொதுமக்கள் கூறுவார்கள். 11 ஆயிரம் பேருக்கு ஆயுத பயிற்சி என்று கூறுகிறார். ஏன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவரை கைது செய்ய தயங்குகிறார்.

கருணாநிதி எதற்கெடுத்தாலும் மேலிடம் கூட்டத்தை கூட்டி காங்கிரசை மிரட்டுகிறார். தைரியமிருந்தால் காங்கிரசுடன் கருணாநிதி நேரடியாக மோதிப்பார்கட்டும்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony