முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் விஷ சோளத்தை சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

காட்மாண்டு, ஜுன் 17 - நேபாளத்தில் விஷ சோளத்தை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். இவர்கள் 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நேபாள நாட்டில் உள்ள பால்பா மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்களில் சிலர் வறுமையில் வாடுகிறார்கள். வறுமையின் காரணமாக காட்டுப் பகுதியில் விளையும் பாம்புச் சோளம் என்ற விஷச் சோளத்தை தாம் பகதூர் தர்லாமி என்பவரின் மனைவியும் அவர்களது 3 குழந்தைகளும் சாப்பிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வயிற்று வலியும், மூக்கு, வாயில் நுரையும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் தான்சேன் நகரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 3 குழந்தைகளும் பரிதாபமாக பலியானார்கள். அவர்களது தாய் ஜெனிசாரா சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிவருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago