சிக்கனமான நிதிக் கொள்கை வளர்ச்சியை பாதிக்கும்: பிரணாப்

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.17 - பணவீக்கத்திற்கு எதிரான இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதை தடுக்கும் வகையில் நிதிக்கட்டுப்பாடு கொள்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிவட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கான வட்டி வகிதமும் அதிகரிக்கும் என்று தெரிகிறது அதேபோல் டெபாசிட்களுக்கான வட்டி வகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பணவீக்கத்திற்கு எதிரான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை ஒப்புக்கொண்டார். அதேசமயத்தில் தற்போது நமக்கு பெரிய சவால் பணவீக்கம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதுதான். நிதிக்கொள்கையை படிப்படியாக கட்டுப்படுத்த வேண்டும். நிதிக்கட்டுப்பாடு நடவடிக்கைகளானது அதிக காலத்திற்கு தொடர்ந்து நீடித்தால் வளர்ச்சியின் வேகத்தை குறைத்துவிடும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் விலை அதிகரிப்பாலும் உள்நாட்டில் சப்ளை-தேவை இடையே வேறுபாடு இருந்ததாலும்தான் பணவீக்கத்திற்கு காரணமாகும் என்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: