எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயப்பூர்,ஜூன்.27 - எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர்களின் உருவப்பொம்மைகளை எரித்தனர்.
டீசல்,சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருள்கள் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர்களின் உருவப்பொம்மையை எரித்தனர்.
போராட்டத்தின் முதல் நாளன்று ஜெய்ப்பூர்,அஜ்மீர்,உதய்பூர், துங்காபூர்,கோதா ஆகிய நகரங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். நேற்றைய போராட்டத்தின்போது தலைநகர் ஜெய்பூரில் உள்ள காந்தி டி.பாய்ன்ட் என்ற இடத்தில் மன்மோகன் சிங் மற்றும் சோனியா ஆகியோர்களின் உருவமப்பொம்மைகளை தீ வைத்து கொளுத்தினர். மேலும் ஐக்கிய ஜனதாதளம், வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் ஆகியவைகளும் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து தனித்தனியாக போராட்டம் நடத்தி வருகின்றன. கேரளாவில் தனியார் பஸ் உரிமையாளர்கள் வருகின்ற 29-ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர். இன்று இடதுசாரி கட்சிகள் சார்பாக போராட்டம் நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |