எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: ரெங்கராஜன்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.27 - எரிபொருள் விலை உயர்வு தவிரிக்க முடியாதது என்று பிரதமரின் பொருளாதார குழுத்தலைவர் ரெங்கராஜன் தெரிவித்துள்ளார். டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், ஆளும் கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் மற்றும் தனியார் பஸ், லாரி போக்குவரத்து சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் போராட்டங்களை தொடங்கியுள்ளன. இந்தநிலையில் பொருளாதார நிபுணரும் பிரதமரின் பொருளாதார குழுத்தலைவருமான ரெங்கராஜன் கூறுகையில் எரிபொருள் விலை தவிர்க்க முடியாதது என்றும் விலையை உயர்த்தாவிட்டால் நிதி பற்றாக்குறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும். பின்னர் இந்த பணவீக்க உயர்வு படிப்படியாக குறைந்து வருகின்ற மார்ச் மாதம் 6.5 சதவீதமாக குறையும் என்றும் ரெங்கராஜன் மேலும் கூறியுள்ளார். ரெங்கராஜன் கூறியுள்ள கருத்தையே வேறு சில பொருளாதார நிபுணர்களும் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: