முக்கிய செய்திகள்

நடிகர் விஜயின் உண்மையான வயது என்ன? திருச்சியில் ரசிகர்களிடையே குழப்பம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

திருச்சி,ஜூன்.- 28 - நடிகர் நடிகைகள் என்றாலே தங்களது வயதை சொல்லாமல் பிறந்த நாள் கொண்டாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில நடிகர்கள் தங்கள் வயதை கூறி பிறந்தநாளும் கொண்டாடுகிறார்கள். ஆனால் நடிகைகள் மட்டும் ஒருபோதும் தங்களது வயதை கூறிக்கொள்வதில்லை. ஏனென்றால் வயதை சொன்னால் தனக்கு மார்க்கெட் இழந்துவிடும் என்ற குறிக்கோளுடன் வயதை மூடி மறைத்து மேக்கப் போட்டு வாழ்ந்து வருகின்றனர். உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் தங்களது உண்மையான வயதை ரசிகர்களுக்கு தெளிவு படுத்தி வருகின்றனர். இதனால் இந்த ரசிகர்களுக்கு தங்களது நடிகரின் வயதில் குழப்பம் இல்லாமல் இருந்து வருகின்றனர். சினிமா துறையை பொறுத்தவரையில் நடிகர்களும் நடிகைகளும் எப்பொழுதும் தங்களை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வமிக்கவர்கள். அதனால் வயதை எப்பொழும் சொல்ல மாட்டார்கள். அப்படியே வயது தெரிந்துவிட்டாலும் அதை மூடி மறைக்கத்தான் பார்ப்பார்கள். ஒரு படத்தில் சிரிப்பு நடிகர் கவுண்டமணி கூறிய காமெடிதான் தற்போது நினைவிற்கு வருகிறது. அதென்னடா 25 வயதிற்கு மேலேயும் போக மாட்டேங்கிறார்கள். 25 வயதிற்கு கீழேயும் போக மாட்டேங்கிறார்கள். அதே 25 வயதில்தான் பிறந்த நாளை கொண்டாடி ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி சுவற்றை நாசம் செய்து வருகிறார்கள் என்றும் கூறுவர். அதுதான் தற்போது நினைவிற்கு வருகிறது. சரி நடிகர் நடிகைகள் தான் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால் தற்போது அனைத்து தரப்பினரும் தங்களது பிறந்த நாளை போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருவதுதான் மிகவும் கொடுமையான விசயம். இதில் தற்போது நடிகர் விஜயின் பிறந்த நாள் விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் பல இடங்களில் கட் அவுட்டுகள் (பிளக்ஸ் போர்டு) வைத்திருந்தனர். ஒவ்வொரு பிளக்ஸ் போர்டிலும் நடிகர் விஜயின் வயது ஒவ்வொரு விதமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கத்தில்  விஜய் ரசிகர் மன்றத்தினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டில்  விஜயின் வயதை 38 என்று குறிப்பிட்டு இருந்தனர்.  

அண்ணாசிலையில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டில் 40 வயது என்றும், மலைக்கோட்டை நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் 41 வயது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. திருவானைக்கோவில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் வைக்கப்பட்டிருந்த போர்டில் 37 வயது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விஜய் ரசிகர்கள் தங்களது பிடித்தமான நடிகரின் வயதை கூட உண்மையாக தெரிந்திராமல் இதுபோன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக விஜயின் வயதை குறிப்பிட்டு வைத்திருப்பதால் விஜயின் ரசிகர்களுக்கு தங்தளது நடிகரின் உண்மையான வயதை தெரியாமல் குழம்பி போய் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொகு வயதை குறிப்பிட்டு வைத்திருப்பதால் இதை படிக்கும் மக்களும் விஜயின் வயதில் குழப்பம் எற்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆர்.கே. ராஜாவிடம் கேட்டபோது , எங்களது தலைவரின் வயதை வேண்டுமென்றே பல்வேறு இடங்களில் மாற்றி மாற்றி சில விஷமிகள் வைத்துள்ளனர். எங்களது தலைவரின் உண்மையான வயது 37தான் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: