முக்கிய செய்திகள்

பிரபுதேவா விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - விவாகரத்து வழக்கில் நடிகர் பிரபுதேவா, மனைவி ரமலத் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நடிகர் பிரபுதேவா, அவரது மனைவி ரமலத் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதற்கிடையில் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல், திருமணம் என்ற செய்தி வெளியானது. இதையடுத்து கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி ரமலத் சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே நயன்தாரா மீதும் வழக்கு தொடுத்தார்.

அதன்பிறகு 6 மாத காலமாக பிரபுதேவா, ரமலத் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு தொடுத்தனர். பின்னர் இருவரும் சுமுகமான முடிவுக்கு வந்து, முழு சம்மதத்துடன் பிரிவது என்று தீர்மானித்தனர். தங்களுக்கு விவாகரத்து கோரி இருவரும் சேர்ந்து சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு 6 மாதத்துக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. முதன்மை குடும்பநல nullநீதிமன்றம் ஜூன் 30-ம் தேதி மனு மீது தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தது. அதன்படி இந்த வழக்கு நீnullதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பிரபுதேவா, ரமலத் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. பிரபுதேவா சார்பில் வக்கீல் சத்யா ஆஜராகி, பிரபுதேவா வெளியூரில் இருப்பதால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

ரமலத் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி, குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் ரமலத் ஆஜராகவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: