முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுடன் அஜித்சிங் சந்திப்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை.2 - முதல்வர் ஜெயலலிதாவுடன் முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங் சந்தித்து பேசினார்.ராஷ்டீரிய லோக்தள் கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஜீத்சிங் சென்னை வந்தார். நேற்று பகல் 12.00 மணியளவில் கோட்டையில் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிட நேரம் பேசினார்கள். பின்னர் வெளியே வந்த அஜீத்சிங்கை நிருபர்கள் பேட்டி கண்டனர்.  அப்போது அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கடந்த நவம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆதரவு அளிப்பதாக கூறும்போது, உங்கள் கட்சி எம்.பிக்களையும் மனதில் வைத்து சொல்லியதாக தெரிகிறதே? அதுதொடர்பாக இப்போது ஏதும் பேசினீர்களா?

பதில்: இப்போது நான் தனிப்பட்ட முறையில் மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். முதல்வர் ஜெயலலிதா நிர்வாகத்தை திறம்பட நடத்தி வருகிறார். அவர் முதல்வராக பதவி ஏற்றபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். அதனால் இப்போது வந்து வாழ்த்து சொன்னேன். காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சொன்னது குறித்து இப்போது ஏதும் பேசவில்லை. அது அப்போதைய வரலாறு. அதன் பிறகு 7 மாதங்களில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது.

கேள்வி: காங்கிரஸ் - தி.மு.க. இடையே உரசல் இருப்பது போல் தெரிவதால் தேசிய அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்குமா? பதில்: வாய்ப்பு இருக்கும். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும். இவ்வாறு அஜீத்சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்