முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர காங்கிரசில் நெருக்கடியை போக்க முதல்வர் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஜூலை.3 - தனி தெலுங்கானா மாநில விவகாரத்தால் ஆந்திர காங்கிரஸ் கட்சியில் நெருக்கடி ஏற்படும் கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை போக்க காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி முதல்வர் கிரண் குமார் ரெட்டி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

தனிதெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வகையும் மசோதாவை இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மெஜாரிட்டியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தாலும் கவிழலாம். இதைத்தடுக்கும் வகையில் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில அமைச்சர்களை சமரசம் செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கும்படி முதல்வர் கிரண் குமார் ரெட்டி மற்றும் ஆந்திர காங்கிரஸ் தலைவர் போத்சா சத்யநாராயணா ஆகியோர்களை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அமைச்சர்கள் ஜனா ரெட்டி, சுனிதா லக்ஸ்மா ரெட்டி மற்றும் பல முக்கிய பிரமுகர்களுடன் முதல்வர் கிரண் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அமைச்சர்கள் சுதர்ஸன் ரெட்டி, பாசவராஜ் சாரையா மற்றும் பல எம்.எல்.ஏ.க்களுடன் மாநில காங்கிரஸ் தலைவர் போத்சா சத்யநாராயணா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பின்போது அவசரப்பட்டு எந்தவித முடிவுக்கு வந்துவிட வேண்டாம் என்றும் தெலுங்கானா மாநிலம் குறித்து கட்சி மேலிடம் விரைவில் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடும். அதுவரை பொருத்திருங்கள் என்று கிரணும் போத்சாவும் கேட்டுக்கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயத்தில் தெலுங்கானா பகுதி மக்களிடம் இருந்து எங்களுக்கு தொடர்ந்து வற்புறுத்தல் வந்துகொண்டியிருக்கிறது. அதனால் தனி தெலுங்கானா விஷயத்தில் மத்திய அரசு மெத்தனபோக்குடன் நடந்துகொள்ள வேண்டாம் என்றும் முதல்வர் மற்றும் போத்சாவிடம் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள் கேட்டுக்கொண்டனர். உங்களுடைய உணர்வை கட்சி மேலிடத்தில் எடுத்துக்கூறுவதாக போத்சா உறுதி அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago